குஜராத்: குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 7 கட்டமாக நடக்கும் இந்த தேர்தலில் முதற்கட்டமாக ஏப்.19ல் 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக ஏப்.26ல் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.
கர்நாடகாவில் 14, குஜராத்தில் 25, மகாராஷ்டிராவில் 11, உபியில் 10, மபி 9, சட்டீஸ்கரில் 7, பீகாரில் 5, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தத்ராநாகர்ஹவேலி, டாமன் டையூ தலா 1 இடங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. குஜராத் மாநிலம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார். இன்று தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் காந்திநகர் தொகுதி அமைந்து இருக்கும் அகமதாபாத்தில் உள்ள பூத்களில் ஓட்டுப்போட உள்ளனர். மேலும் ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராதித்யா சிந்தியா(குணா தொகுதி), மன்சுக் மாண்டவியா(போர்பந்தர், புருஷோத்தம் ரூபாலா(ராஜ்காட்), பிரகலாத் ஜோஷி(தார்வாட்), எஸ்பி சிங் பாகெல்(ஆக்ரா) ஆகியோரும் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
மேலும் மபி முன்னாள் முதல்வர்கள் சிவராஜ்சிங்சவுகான்(விதிஷா), திக்விஜய்சிங்(ராஜ்கார்க்), பசவராஜ் பொம்மை( ஹவேரி), சரத்பவார் மகள் சுப்ரியா சுலே(பாராமதி), அகிலேஷ்யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி) ஆகியோரும் முக்கிய வேட்பாளராக உள்ளனர். 120 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.