பெரம்பலூர்,மே.7: பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.44 சதவீதம் தேர்ச்சி பெற்றது.மாநிலத்தில் 6-வது இடத்தைப் பெற்றது. பிளஸ்2பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட் டது. பெரம்பலூர் மாவட்டத் தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 79 மேல் நிலைப் பள்ளிகளைச் சேர் ந்த 3,499 மாணவர்களும், 3,502 மாணவிகளும் எனமொத்தம் 7001 மாணவ, மாணவிகள் 35 தேர்வு மையங்களில் எழுதினர். இதில் 3,342மாணவர்களும், 3,410 மாணவிகளும் என மொத்தம் 6,752 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி பெரம் பலூர் மாவட்டம் 96.44 சத வீதத் தேர்ச்சியைப் பெற்று ள்ளது. இதில் மாணவர்கள் 95.51 சதவீதத் தேர்ச்சியை யும், மாணவிகள் 97.37 சத வீதத் தேர்ச்சியையும் பெற் றுள்ளனர்.மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 1.86 சதவீதம் கூடுதலாக தேர்ச் சியைப் பெற்றுள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், ஆதிதிரா விடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனி யார், சுயநிதிப் பள்ளிகள் என மொத்தமுள்ள 79 மேல் நிலைப்பள்ளிகளில் 38 பள் ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி யைப் பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.இதில் ரஞ்சன்குடி, வாலி கண்டபுரம், எளம்பலூர், கவுள்பாளையம், நெற்கு ணம், பேரளி, பூலாம்பாடி, அனுக்கூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளும், கிழுமத்தூர் மற்றும் பெரம் பலூர் அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 10 அரசு மேல் நிலைப்பள்ளிகளும், நத்தக் காடு அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி என ஒரேயொரு ஆதிதிரா விடர் நல மேல்நிலைப் பள் ளியும், எறையூர் நேரு மேல் நிலைப்பள்ளி, தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி என 2 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 17 தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகள், 8 சுய நிதிப்பள்ளிகள் என மொத் தம் 38 மேல்நிலைப் பள்ளி களின் மாணவ,மாணவியர் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுளனர்.
The post பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு: கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.