×

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்

கருர், மே7: உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும், விவசாயிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருபவருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers Protection Association ,Kerr ,Tamil Nadu Farmers Protection Association ,Karur District Collector's Office ,Administrator ,Eisen Murugasamy ,Dinakaran ,
× RELATED மணல் லாரிகள் சிறைபிடிப்பு