- இந்தூர் அரசு
- தர்மபுரி
- இந்தூர் அரசு உயர் செகண்டரி பள்ளி
- தர்மபுரி மாவட்டம்
- இந்தூர் அரசு பள்ளி
- தின மலர்
தர்மபுரி, மே 7: இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 95.86 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 242 பிளஸ்2 மாணவர்கள்தேர்வு எழுதினர். இதில், 232 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 95.86 சதவீதம் தேர்ச்சி ஆகும். இப்பள்ளியில் முதல் மதிப்பெண் ஸ்ரீ ஹரிணி 600க்கு 533 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இப்பள்ளியில் 500க்கும் மேல் 6 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவி ஜனனி 505 மதிப்பெண், பாரதிசெல்வன் 501 மதிப்பெண், வித்யா 500 மதிப்பெண், பவித்ரா 500 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
வேதியியல், உயிரியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வரலாறு ஆகிய பாடங்களில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கவுதமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைகுந்தம் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை
பாராட்டினர்.
The post இண்டூர் அரசு பள்ளியில் 95.86 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.