- காரியாபட்டி அரசு மருத்துவமனை
- காரியபட்டி
- வில்லியம்மாள்
- மிதிலைக்குளம்
- திருச்சுழி தாலுக்கா
- வலியம்மாள் காரியாபட்டி அரசு மருத்துவமனை
- காரியபட்டி அரசு மருத்துவமனை
- தின மலர்
காரியாபட்டி, மே 7: திருச்சுழி தாலுகா மிதிலைகுளத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(45). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில் கருப்பையில் மிகப்பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. உடனடியாக வெள்ளையம்மாள் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் மனோகரன் தலைமையில் டாக்டர்கள் வெங்கடேசன், ஜெயராணி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து வெள்ளையம்மாளின கர்ப்ப பை மற்றும் 2 கிலோ கருமுட்டை கட்டியை அகற்றினர்.
தமிழக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. தற்பொழுது வெள்ளையம்மாள் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கர்ப்ப பை, பித்த பை, குடல்வால் மற்றும் குடல் இறக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு லேபராஸ்கோப் மூலம் சிறந்த நிபுணர்களை வைத்து காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
The post காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சையை அசத்தலாக முடித்த டாக்டர்கள் appeared first on Dinakaran.