- ஆண்டுதோறும்
- அண்ணா சைபாபா
- கோவில்
- லெட்சிபுரம் கிராமம்
- பிறகு நான்
- வருடாந்திர கும்பாபிஷேகம்
- அண்ணாசைபாபா கோயில்
- ஸ்ரீ அன்னசை பாபா கோயில்
- லெட்சுமிபுரம்
- அண்ணா சைபாபா கோயில்
- கும்பாபிஷேகம்
தேனி, மே 7: தேனி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள அன்னசாய்பாபா கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிசேக விழா நடந்தது. தேனி அருகே லெட்சுமிபுரத்தில் ஸ்ரீஅன்னசாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. விழாவில் சுந்தரவடிவேல் அடிகளார் தலைமையில் பிரம்மசித்தயாகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகளான டாக்டர்.வி.ஆர்.ராஜன், அவரது மனைவி ரேணுகா செய்தனர்.
இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், இன்ஜீனியர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன், சிவக்குமார், பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதாசிவக்குமார், வக்கீல்கள் முத்துராமலிங்கம், குருராதாகிருஷ்ணன், மணிகார்த்திக், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ், ராஜாஅழகணன்,சேது உள்ளிட்ட உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
The post தேனி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் அன்ன சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா appeared first on Dinakaran.