×

உடுமலை அருகே திடீர் சாலை மறியல்

 

உடுமலை, மே7: உடுமலை அருகே உள்ள ஜல்லிபட்டி பகுதியில் வீர ஜக்கம்மாள் தேவி கோவில் உள்ளது.இக்கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற 9ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஊர் மக்கள் ஒன்று கூடி திருவிழா எடுக்கும் சூழலில் சமுதாயத்தின் ஒரு பிரிவினர் ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அதைத் தொடர்ந்து உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் சுந்தரம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தளி ரோடு, கச்சேரி வீதி கார்னர் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தாசில்தார், டிஎஸ்பி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இன்று (7ம்தேதி) ஆர்.டி.ஓ தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post உடுமலை அருகே திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Veera Jakkammal Devi ,Jallipatti ,Chitrai festival ,
× RELATED பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை