மதுரை, மே 7: மதுரை மாநகராட்சியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 15 உள்ளன. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை மாணவர்கள் 514 பேர், மாணவிகள் 1,553 பேர் என மொத்தம் 2,067 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 442 பேர், மாணவிகள் 1,455 பேர் என மொத்தம் 1,897 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 91.78 ஆனது. இதில் நாவலர் சோமசுந்தரபாரதியார் மாநகராட்சி பள்ளி, கம்பர் மாநகராட்சி பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று முதல் இடத்தை பிடித்தது.
இரண்டாம் இடத்தை 98.96 சதவிகிதம் பெற்ற கஸ்தூரி பாய்காந்தி மாநகராட்சி பள்ளியும், மூன்றாவது 96.26 சதவிகிதம் ெபற்று வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி பெற்றது. மொத்தம் 600க்கு 580 மதிப்பெண் பெற்று மாணவி எம்.சரண்யா முதலிடம் பெற்றார். 579 மதிப்பெண் பெற்று கே.வி.வர்ஷினி இரண்டாம் இடமும், 577 மதிப்பெண் பெற்று ஹரிணிஸ்ரீதேவி மூன்றாம் இடமும் பெற்றனர்.
The post மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் 1,897 பேர் வெற்றி appeared first on Dinakaran.