×

மாவட்ட லீக் கால்பந்து போட்டி

 

திண்டுக்கல் மே 7: திண்டுக்கல்லில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த பிரிமியர் டிவிசன் போட்டியில், அனுமந்தராயன் கோட்டை லயோலா அணி, நிலக்கோட்டை சோலார் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் டிவிசன் போட்டியில், திண்டுக்கல் அரசு பள்ளி முன்னாள் மாணவர் கால்பந்து அணி, செவன் டாலர்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஆர்ட்ஸ் ட்ரஸ்ட் சிட்டி அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது டிவிசன் போட்டியில், வத்தலகுண்டு ராயல் கால்பந்து அணி, சுந்தரம் மெமோரியல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. திண்டுக்கல் லயன் தெரு அணி, புனித மரியன்னை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கார்னேசன் கால்பந்து அணி, ஏ.பி.சி., பாலிடெக்னிக் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாம் டிவிசன் போட்டியில், பழநி ஸ்டால் லயன் கால்பந்து அணி, ஆர்.என்.லட்சுமண சாமி மெமோரியல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. நான்காம் டிவிசன் போட்டியில், அன்னை ஸ்போர்ட்ஸ் அணி, ஜி.எஸ். அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அரசன் கால்பந்து அணி, ஞானம் மெமோரியல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தத் தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட லீக் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : District League Football Tournament ,Dindigul ,Dindigul District Football Club ,Premier Division ,Anumandarayan Fort Loyola ,Asphalt Solar ,District League Soccer Match ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் மாவட்ட லீக் கால்பந்து போட்டிகள்