×
Saravana Stores

12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய – 399 மாணவர்களும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 399 மாணவர்களில் மாணவி கே.ப்ரீத்தி லட்சுமி மொத்தம் – 600க்கு 594 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடத்து சாதனை படைத்துள்ளார். இவர் ஃப்ரென்ச் – 98, ஆங்கிலம் – 96, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாடு ஆகிய 4 பாடங்களில் 100 க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் மாணவி ஆர்.அபிதா – 593 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். இவர் பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் ஆகிய 4 பாடங்களில் 100 க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் மாணவர் எஸ்.ரகுராமன் – 586 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இவர் வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் 69 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளி சராசரி மதிப்பெண் 82%. சமீபத்தில் நடைபெற்ற ஜெஇஇ பொதுத்தேர்வில் மாணவர் பி.ஆர்.ஜீவன் பிரணவ் – 98.87 % சதவீதம் மதிப்பெண் பெற்று திருவள்ளூர் நகரின் முதல் மாணவராகத் திகழ்கின்றார். இயற்பியலில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து 27 மாணவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ப.விஷ்ணு சரண், முதன்மை செயல் அலுவலர் பரணிதரன், முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி ஆகியோர் பாராட்டினர்.

The post 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Sri Niketan Matric School ,Thiruvallur ,Sri Niketan Matriculation Higher Secondary School ,K. Preethi Lakshmi ,Sri Niketan Matriculation School ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...