- திமிட்டி திருவிழா
- தெய்வம் திரௌபதி கோயில்
- அத்திமாஞ்சேரி
- வனதுரகபுரம்
- பல்லிப்பட்டப்பள்ளி
- தமிழ்-ஆந்திரா
- திருப்பதி அம்மன் கோவில்
- திருப்பதி அம்மன் கோயில் திமிதி திருவிழா
பள்ளிப்பட்டுபள்ளிப்பட்டு அருகே தமிழக – ஆந்திர எல்லையில் அமைந்துள்ள அத்திமாஞ்சேரி, வனதுர்காபுரம் ஆகிய கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் திரவுபதி அம்மன் கோயிலில் திமீதி திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு புஜைகள் நடைபெற்றது.
விழாவில், முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் மாலை கிராம வீதிகளில் ஊர்வலமாக கோயில் வந்து, அக்னி குண்டத்திற்கு முன்பு திரவுபதி அம்மன் எழுந்தருள, அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், அத்திமாஞ்சேரி, வனதுர்காபுரம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
The post திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.