×
Saravana Stores

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் செயல் அறங்காவலர் திருவேங்கடவன் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். நடராஜர் கோயிலும், கோவிந்தராஜ பெருமாள் கோயிலும் ஒரே வளாகத்தில் உள்ள போதிலும், பெருமாள் கோயில் தனிப்பட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கோவிந்தராஜ பெருமாள் கோயில் திருவிழாக்களுக்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழு எப்போதும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக 1918 முதல் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, சாதகமாக உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த 1979 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்த போதும் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பிரமோற்சவம் நடத்துவதை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். தற்போது, மே 25 முதல் 29ம் தேதி வரை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்களும், அறங்காவலர்களும் ஏற்றுள்ளனர். எனவே, பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு சிறப்பு அமர்வில் வரும் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

The post சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Govindaraja Perumal temple ,CHENNAI ,DR ,Ramesh ,Chennai High Court ,Brahmatsavam ,Chidambaram Nataraja Temple ,Acting ,Thiruvenkatavan ,Chidambaram Govindaraja ,Perumal ,Temple ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு...