- விவேகானந்தா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பிளஸ் 2
- மதுராந்தகம்
- மதுராந்தகம்
- விவேகானந்தா மெட்ரிக் பள்ளி
- விவேகானந்தர்
- செங்கல்பட்டு மாவட்டம்
- மதுராந்த
மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 183 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.
அதில் இயற்பியல் – 1, கணிதம் – 1, கணினி அறிவியல் – 4, வணிகவியல் – 9, பொருளியல் – 6, கணக்குப்பதிவியல் – 1 ஆகிய பாடப் பிரிவுகளில் 22 மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். மேலும், பல மாணவ, மாணவிகள் 90 சதவீதத்திற்கு மேல் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
இதனையடுத்து, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் பட்டாசு வெடித்து சக மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் லோகராஜ் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர், ஆசிரியைகளை வாழ்த்தி பரிசு வழங்கினார்.
The post விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி appeared first on Dinakaran.