- தையூர்,
- இரம்பேடு அரசு பள்ளிகள் மையம்
- Tiruporur
- அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி
- தையூர்
- தையூர், இரம்பேடு அரசு பள்ளிகள் மையம்
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தையூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 6 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 30 பேர் தேர்வெழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி லோகேஸ்வரி 507 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
திருப்போரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி இந்த கல்வியாண்டில் 96 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய 128 பேரில், 123 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி பாமிதா 550 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அபர்ணா என்ற மாணவி 526 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், தர்ஷினி என்ற மாணவி 505 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் 100 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 77 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இங்கு, தேர்வெழுதிய 245 பேரில் 189 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர் தீபிகா என்ற மாணவி 552 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அகிலா என்ற மாணவி 501 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 60 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போன்று, இரும்பேடு ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் பயின்ற 38 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இந்த இரண்டு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தையூர், இரும்பேடு அரசு பள்ளிகள் சென்டம் appeared first on Dinakaran.