×
Saravana Stores

கல்வித்துறை திட்டம் குறித்து பீகார் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்துகொள்ள சென்னை வந்துள்ள 250 பீகார் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்வித்துறை அலுவலர்கள் 250 பேர் சென்ைன வந்துள்ளனர். அவர்களுக்கு கடந்த மாதம் 22ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி 5 கட்டங்களாக தற்போது நடக்கிறது. இந்த பயிற்சியின் முதற்கட்டமாக 50 அலுவலர்களும், இரண்டாம் கட்டமாக 40 அலுவலர்களும், மூன்றாம் கட்டமாக நேற்று (6ம்தேதி) 27 அலுவலர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். மேலும், 100 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சின் மூலம் பீகாரில் பணியாற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், தகைசால் பள்ளிகள், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் ஏற்படுத்துதல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சிகள், சிறப்புத் திட்டங்கள் சார்ந்த விரிவான விளக்கங்களை பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர் அறிவொளி, இணை இயக்குநர் குமார், சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஷமீம் உள்ளிட்ட அதிகாரிகள் பீகார் மாநில அலுவலர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

The post கல்வித்துறை திட்டம் குறித்து பீகார் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bihar ,Tamil Nadu government ,School Education Department ,Tamil Nadu ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...