- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தலைமை பதிவாளர்
- ஜோதிராமன்
- சென்னை உயர்நீதிமன்ற தமிழ்
- ஆசிரியர்
- டி.நிஷா சிதம்பரம்
- நீதிபதி
- அரக்கோணம்
- 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்
- எம். ஜகாரியா
- தின மலர்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை வருமாறு: சென்னை உயர் நீதிமன்ற தமிழ் சட்ட புத்தக உதவி ஆசிரியர் டி.நிஷா சிதம்பரம் 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரக்கோணம் 2வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்.சக்காரியா பானு எழும்பூர் நீதிமன்ற கூடுதல் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வேலூர் முதன்மை மாவட்ட முன்சீப் கே.மலர்கொடி திருவொற்றியூர் மாவட்ட முன்சிப்பாகவும், ஆரணி மாவட்ட முன்சிப் பி.டி.சதீஷ்குமார் காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட முன்சிப்பாகவும், வேலூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கே.ஆர்.பத்மா குமாரி எழும்பூர் நீதிமன்ற விரைவு நீதிமன்ற நீதிபதியாகவும், உத்திரமேரூர் மாவட்ட முன்சிப் வி.பிரேம்குமார் கலசப்பாக்கம் மாவட்ட முன்சிப்பாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கே.ராம்குமார் அரக்கோணம் 1வது மாஜிஸ்திரேட்டாகவும், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட முன்சிப் ஆர்.ராஜேஸ்வரி-2 காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட முன்சிப்பாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற பதிவாளர் டி.ஷோபாதேவி திருவள்ளூர் கூடுதல் மாவட்ட முன்சிப்பாகவும், சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வி.லாவண்யா செங்கல்பட்டு 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் எ.வானதி குறிஞ்சிப்பாடி மாவட்ட முன்சிப்பாகவும், காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட முன்சிப் சரண்யா செல்வம் பொன்னேரி 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், செங்கல்பட்டு 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.ரீனா கள்ளக்குறிச்சி 2வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எஸ்.நித்யா சோளிங்கர் மாவட்ட முன்சிப்பாகவும், அரக்கோணம் 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்.அமுதா பூந்தமல்லி 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி 1வது கூடுதல் மாவட்ட முன்சிப் ஆர்.சுகந்தி எழும்பூர் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாகவும், ஆலந்தூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.வைஷ்ணவி திருக்கோவிலூர் 1வது கூடுதல் மாவட்ட முன்சிப்பாகவும், பூந்தமல்லி 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஜெ.ஸ்டாலின் குடியாத்தம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஆலந்தூர் கூடுதல் மாவட்ட முன்சிப் பி.நித்யா ஆலந்தூர் 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், எழும்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பி.வைஷ்ணவி சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாகவும், ஆலந்தூர் 2வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஏ.கே.என்.சந்திர பிரபா ஜார்ஜ்டவுன் 4வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 104 மாஜிஸ்திரேட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.