×
Saravana Stores

ஜார்கண்டில் அமைச்சரின் செயலாளர் பணியாளரிடம் ரூ30 கோடி பறிமுதல்

ராஞ்சி: ஜார்கண்டில் அமைச்சரின் செயலாளர் வீட்டு வேலைக்காரரிடம் இருந்து கணக்கில் வராத ரூ30கோடி பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளராக பணிபுரிந்தவர் வீரேந்திர குமார் ராம் . இவர் ஒப்பந்ததார்களுக்கு டெண்டர்களை ஒதுக்குவற்காக கமிஷன் என்ற பெயரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வருமானத்தை அவரும் அவரது குடும்பத்தினரும் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு வீரேந்திர குமார் ராமை கைது செய்தனர்.

அவருக்கு சொந்தமான ரூ39கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த , பாகூர் சட்டமன்ற தொகுதி எம்எல்எவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஆலம்கிர் ஆலனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அமைச்சரின் செயலாளரான சஞ்சீவ் லாலின் பணியாளர் வீட்டில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது பணியாளரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் சுமார் ரூ 30கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இவற்றில் பெரும்பாலும் ரூ500 நோட்டுகளாகும். எனவே அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக பணம் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. அமலாக்கத்துறை சோதனையின்போது தங்கநகைளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கதிகானா சவுக் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து பெரிய பைகளில் பணத்தை எடுக்கும் வீடியோகாட்சிகள் வைரலாகி வருகின்றது. இது குறித்து அமைச்சர் ஆலம்கிர் இடம் கேட்டபோது அவர், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அந்த இடம் செயலாளரின் அதிகாரப்பூர்வ இடத்துடன் தொடர்புடையது” என்றார்.

The post ஜார்கண்டில் அமைச்சரின் செயலாளர் பணியாளரிடம் ரூ30 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : minister ,Jharkhand Ranchi ,Enforcement Directorate ,Jharkhand ,Virendra Kumar Ram ,Rural Development Department ,Ranchi, Jharkhand ,minister's secretary ,Dinakaran ,
× RELATED கர்நாடக நில முறைகேடு வழக்கில் 8...