×
Saravana Stores

தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும் பள்ளி கல்வியை முடித்து கல்லூரி வாழ்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: பள்ளி கல்வியை முடித்து கல்லூரி வாழ்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாட வாரியான தேர்ச்சி விவரம்
பிளஸ்2 தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியரில் பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வருமாறு:
* மொழிப்பாடத் தேர்வில் 7 லட்சத்து 60,606 பேர் பங்கேற்றனர். அவர்களில் 7 லட்சத்து 50,246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 98.64%.
* ஆங்கிலப் பாடத் தேர்வில் 7 லட்த்து 60 ஆயிரத்து 606 பேர் எழுதி, 7 லட்சத்து 49 ஆயிரத்து 402 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.53%
* இயற்பியல் தேர்வில் 4லட்சத்து 86 ஆயிரத்து 961 பேர் எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 557 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.48 சதவீதம்.
* வேதியியல் பாடத் தேர்வில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 961 பேர் எழுதி, 4 லட்சத்து 82 ஆயிரத்து 763 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 99.14%.
* உயிரியல் தேர்வில் 2 லட்சத்து 48,216 பேர் எழுதினர். 2 லடசத்து 46 ஆயிரத்து 604 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 99.35 சதவீதம்.
* தாவரவியல் பாடத் தேர்வில் 81 ஆயிரத்து 57 பேர் எழுதினர். 80 ஆயிரத்து 132 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 98.86 சதவீதம்.
* விலங்கியல் பாடத் தேர்வில் 81 ஆயிரத்து 57 பேர் எழுதினர். அவர்களில் 80 ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 99.04%.
* கணக்குப் பாடத் தேர்வில் 3 லட்சத்து 76,832 பேர் எழுதினர். அவர்களில் 3 லட்சத்து 71,426 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 98.57 சதவீதம்.
* வணிகவியல் பாடத் தேர்வில் 2 லட்சத்து 44,238 பேர் எழுதினர் அதில் 2 லட்சத்து 38,787 பேர் தேர்ச்சி பெற்றனர்.
* அதேபோல கணக்குப் பதிவியல் தேர்வில் 2 லட்சத்து 44,238 பேர் எழுதி, 2 லட்சத்து 35,947 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 96.61 சதவீதம்.

நிர்வாக ரீதியான பள்ளிகள் தேர்ச்சி விவரம்
பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியரில் நிர்வாக ரீதியாக இடம் பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி வீதம்:
* நிதியுதவி பெறும் பள்ளிகள் மூலம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 883 பேர் பங்கேற்று 1 லட்சத்து 73 ஆயிரத்து 680 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம்95.49%.
* அரசுப் பள்ளிகளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 738 பேர் தேர்வில் பங்கேற்று, 3 லட்சத்த 4 ஆயிரத்து 692 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 91.02%.
* தனியார் சுயநிதிப் பள்ளிகளின் மூலம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 985 பேர் தேர்வில் பங்கேற்று, 2 லட்சத்து 40 ஆயிரத்து 824 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.70%.
* ஆதிதிராவிடர் பள்ளிகள் மூலம் 3564 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3187 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 89.42%.
* மாநகராட்சி பள்ளிகள் மூலம் 9326 பேர் பங்கேற்று, 8393 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 90.00 சதவீதம்.
* வனத்துறை பள்ளிகள் மூலம் 132 பேர் பங்கேற்று, 114 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம்86.36%.
* கள்ளர் நலத்துறை பள்ளிகள் மூலம் 1612 பேர் தேர்வு எழுதி 1539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 95.47%.
* நகராட்சிப் பள்ளிகள் மூலம் 6781 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 6232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 91.90 சதவீதம்.
* சமூக நலத்துறை பள்ளிகள் மூலம் 269 பேர் எழுதினர். அவர்களில் 252 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 93.68%.
* மலைவாழ் மக்கள் நலத்துறை பள்ளிகள் மூலம் 1402 பேர் தேர்வு எழுதி 1334 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 95.15%.

The post தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர வேண்டும் பள்ளி கல்வியை முடித்து கல்லூரி வாழ்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin Dwitt ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED மருது வீரபாண்டியர்களின் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்