துபாய்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ செலுத்தும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: ஐசிஐசிஐயின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட சர்வதேச மொபைல் எண்ணின் மூலம் கட்டண பில்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் இருந்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பொருட்களை வாங்கலாம். ஐசிஐசிஐ ஐமொபைல் செயலி வாயிலாக இதனை பெறலாம் என தெரிவித்துள்ளது.
இதற்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து,கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளில் உள்ளவர்கள் தங்களுடைய இந்திய மொபைல் எண்ணை பதிவு செய்த பின்னர் இந்த வசதியை உபயோகித்து வந்தனர். அந்த நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச மொபைல் எண்ணை மாற்றாமல் இந்த வசதியை பெற முடியும் என ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரி தெரிவித்தார்.
The post சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ செலுத்தும் வசதி: தனியார் வங்கி அறிமுகம் appeared first on Dinakaran.