புதுடெல்லி: கேரள கடற்பகுதியில் தமிழக மீனவர்களுடன் வந்த ஈரான் மீன்பிடி கப்பலை இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினார்கள். கேரள கடற்பகுதிக்குள் கடந்த 5ம் தேதி ஈரான் மீன்பிடி கப்பல் நுழைந்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற இந்திய கடலோர காவல்படையினர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தினார்கள். இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்திய கடலோர காவல் படையினர் 6 இந்தியர்களுடன் ஈரான் கப்பலை தடுத்து நிறுத்தினார்கள். கப்பலுக்குள் சென்று சட்டவிரோத செயல்கள் நடக்கிறதா என சோதனை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் கப்பலின் உரிமையாளர் ஈரானை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துள்ளார். மேலும் ஈரான் உரிமையாளர் தமிழக மீனவர்களை மோசமாக நடத்தியதாவும், அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கவில்லை என்றும் பாஸ்போர்ட்டுக்களை பறித்துக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஈரானில் இருந்து இதே கப்பலை பயன்படுத்தி இந்தியா தப்பி செல்வதற்கு திட்டமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து கப்பல் கொச்சி கொண்டுவரப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post 6 தமிழக மீனவர்களுடன் ஈரான் மீன்பிடி கப்பல் பறிமுதல் appeared first on Dinakaran.