×

உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு


மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது. கடந்த வாரம் பேட்டி அளித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைனுக்கு பிரான்ஸ் படைகள் அனுப்பப்படுமா என்பதை மறுக்க முடியாது என்றார். இங்கிலாந்து வெளியுளவு செயலாளர் டேவிட் கேமரூன், ரஷ்யாவின் இலக்குகளை தாக்க இங்கிலாந்தின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த முடியும் என்றார். இந்த கருத்துக்கள் ஆபத்தானது என்றும், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரஷ்யா தனது அணு ஆயுதங்களை கொண்டு போர் பயிற்சி நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. இது மேற்கத்திய தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கான பதிலடி என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்தினாலும் அதை ரகசியமாகவே செய்துள்ளது. இப்போது முதல் முறையாக அதை பகிரங்கமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Moscow ,President ,Emmanuel Macron ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி