×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.28% மாணவ, மாணவியர் தேர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.28 சதவீதம் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 1.46 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம்தேதி தொடங்கி 22ம்தேதி வரை தமிழக முழுவதும் பல்வேறு மையங்களில் பள்ளி கல்வித்துறை விதித்த கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்றது.

தேர்வு முடிவுற்று, விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று நேற்று காலை 10 மணியளவில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், 102 பள்ளிகளை சேர்ந்த 5,750 மாணவர்களும், 6,791 மாணவிகள் என மொத்தம் 12,541 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,060 மாணவர்கள், 6,395 மாணவிகள் என மொத்தம் 11,455 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.28 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் தமிழகத்தில் 32வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.46 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 91 மாணவ – மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அதன் தேர்வு முடிவில் 91 பேர் தேர்ச்சி பெற்றதால், அப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் அரசு உதவிபெறும் பள்ளி மரிய ஆக்ஸிசம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 119 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* செங்கல்பட்டில் 94.71 சதவீதம் பேர் தேர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த 237 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நல துறை பள்ளிகளின் எண்ணிக்கை 79. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20. மெட்ரிகுலேசன் மற்றும் சுய நிதி பள்ளிகளின் எண்ணிக்கை 138.செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 237. இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளின் எண்ணிக்கை 79. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 20.

மெட்ரிகுலேசன் மற்றும் சுய நிதி பள்ளிகளின் எண்ணிக்கை 138. மார்ச் 2024ல் நடைபெற்ற பொதுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 25242. அதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 23907 பேர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 94.71 சதவீதம். இதனால், மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் செங்கல்பட்டு மாவட்டம் 18வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.52 சதவீதம். இது மாநில அளவில் 22வது இடமாகும். இந்த ஆண்டு பொதுத் தேர்வில் மாணவர்கள் 11455, மாணவிகள் 13787 தேர்வு எழுதினர். இதில் 10632 மாணவர்கள் 13275 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.82 சதவீதமும், மாணவிகள் 96.29 சதவீதமும் பெற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி, அஞ்சூர் அரசு ஆதிதிரவிடர் நல மேல்நிலைப்பள்ளி, தையூர், இரும்பேடு மற்றும் செய்யூர்ஆகிய 3 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.28% மாணவ, மாணவியர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Plus 2 General Examination ,Kanchipuram district ,Kanchipuram ,Department of Tamil Nadu School Education ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...