×

சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை 7 நாட்களுக்குள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்புறப்படுத்த தவறினால் நாய் உரிமையாளர் மீது சட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி சாலை பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின. நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தன்னுடைய 2 நாய்களுடன் பூங்கா சென்றுள்ளார். அந்த வளர்ப்பு நாய்கள் பூங்கா உள்ளே விளையாடி கொண்டிருந்த காவலாளி மகள் சுதக் ஷாவை 2 கடித்தது. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சிறுமி சுதக் ஷாவை 2 நாய்களும் கடித்தபோது உரிமையாளர் புகழேந்தி தடுக்காமல் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். ராட்வைலா நாய்கள் குறித்து பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் உரிமையாளர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வைலா இன நாய்களை வைத்திருந்ததாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து 3 பேரும் ஜாமினில் விடுவிக்கபட்டனர்.

இந்நிலையில் சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை 7 நாட்களுக்குள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்புறப்படுத்த தவறினால் நாய் உரிமையாளர் மீது சட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மேற்படி முகவரியில் வசிக்கும் நீங்கள் தங்கள் வீட்டில் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் செல்லப்பிராணிகள் உரிம (Pet License) இன்றி ராட்வைலர் (Rottweiler) நாய்களை வளர்த்து வந்ததுடன் அவற்றை உரிய பாதுகாப்பின்றி இவ்விரண்டு நாய்களையும் வெளியே அழைத்து சென்ற போது அவை கடித்து குதறி சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

எனவே சட்டம் 1930 பிரிவு 44ன்படி இது ஒரு தொல்லையாக கருதப்படுவதால் மக்களின் நலனை கருதி இத்தாக்கீது பெறப்பட்டு ஏழு தினங்களுக்குள் தாங்கள் வளர்த்து வரும் நாய்களை அப்புறப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தவறினால் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை தொடரப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipality ,Chennai Municipal Corporation ,Municipality ,
× RELATED சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா...