- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- I. துணை ஆளுநர்
- ந.I.A.
- கவர்னர்
- கலிஸ்டன்
- ஆம் ஆத்மி கட்சி
- தேசிய செயலாளர் நாயகம்
- உலக இந்து கூட்டமைப்பு
- துணை கவர்னர்
- தின மலர்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி நடத்துவதற்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு நிதி அளிப்பதாக துணைநிலை ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு அளித்துள்ளார். உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகாரில் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான முறைகேடு செய்ததாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பாஜக முயல்வதாக அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரைத்துள்ளார். நாளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநரின் இந்த பரிந்துரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சருக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை appeared first on Dinakaran.