×
Saravana Stores

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து 73,896 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தும் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து 73,896 புள்ளிகளானது. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 481 புள்ளி உயர்ந்து 74,359 புள்ளிகளை தொட்டுவிட்டு 400 புள்ளிகள் சரிந்தது. கோட்டக் வங்கி 5%, டி.சி.எஸ். 2%, இந்துஸ்தான் யுனிலீவர் 1.8%, எம்&எம், சன்பார்மா பங்குகள் தலா 1.4% விலை உயர்ந்தன.

டெக் மகிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, JLW ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்போசிஸ் பங்குகளும் விலை அதிகரித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 22,443 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. காலை நேர வர்த்தகத்தில் 113 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிஃப்டி பிற்பகலில் சரிந்து 22443 புள்ளிகளில் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து 73,896 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,SENSEX ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!