×

சேப்பங்கிழங்கு சமோசா

தேவையான பொருட்கள் :

மைதா – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சேப்பங்கிழங்கு – 6
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு

மசாலா செய்ய :

நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை- சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
லுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை  :

முதலில் மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு பிசையவும். பின் சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இதனை 30 நிமிடங்கள் வரை மூடி போட்டு அப்படியே வைத்து விடவும். சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பின்னர் மசித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும். பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சமோசா போல் சுருட்டி கொள்ளவும்.
பின் அதில் செய்து வைத்த மசாலாவை வைக்கவும். இப்பொது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

The post சேப்பங்கிழங்கு சமோசா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்