புவனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சராக பாஜகவை சேர்ந்தவர் பதவி ஏற்பார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், பாஜக பகல்கனவு கண்டு கொண்டிருப்பதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பெர்ஹாம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவில் நவீன் பட்னாயக் அரசு ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நிரந்தரமாக காலாவதியாகிவிடும் என்றார்.
ஒடிசா முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த ஒருவர் ஜூன் 10ம் தேதி பதவியேற்பார் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே தான் வந்துள்ளதாக கூறினார். மோடியின் இந்த கருத்து குறித்து பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும், ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்னாயக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒடிசாவில் ஆட்சி அமைப்பது பற்றி பாஜக பகல்கனவு கண்டுக் கொண்டிருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.
The post “ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி appeared first on Dinakaran.