- பொது கவுன்சிலர் குழு
- கோவிந்தராஜா பெருமாள் கோயில்
- சிதம்பரம் கோயில்
- Icourt
- சென்னை
- பொதுசெயலாளர் குழு
- சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயில்
சென்னை: சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுக்கிறது என்று அறங்காவலர் குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற மே 25ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு பிரம்மோற்சவம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில், சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் செயல் அறங்காவலர் திருவேங்கடவன் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், கோவிந்தராஜ பெருமாள் கோயிலும், நடராஜர் கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள போதிலும், பெருமாள் கோயில் தனிப்பட்ட நிர்வாகத்தால் செயல்பட்டு வருவதாக மனுவில் தெரிவித்திருக்கிறார். கோவிந்தராஜ பெருமாள் கோயில் திருவிழாக்களுக்கு நடராஜர் கோயில் பொது தீட்சிதர் குழு எப்போதும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது சம்பந்தமாக 1918ம் ஆண்டு முதல் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ளதாக பதில் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த 1932ம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்த கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த 1979ம் ஆண்டு முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தபோதும் நடராஜர் கோயில் பொது தீட்சிதர் குழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. தொடர்ச்சியாக பிரமோற்சவம் நடத்த தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். தற்போது மே 25 முதல் 29-ம் தேதி வரை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இதை பக்தர்களும், அறங்காவலர்களும் ஏற்றுக்கொண்டனர் என்பதால் பிரமோற்சவத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை சிறப்பு அமர்வாக வருகின்ற 10ம் தேதி நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசலு அமர்வு விசாரிக்கவுள்ளது.
The post சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுக்கிறது: ஐகோர்ட்டில் அறங்காவலர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.