தைவான்: தைவானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகலில், தைவானின் ஹுவாலியன் நகரத்திலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிலிப்பைன்ஸ் கடலில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக பூமியின் ஆழத்தில் ஏற்படும் பூகம்பங்களை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் அறிக்கையை USGS வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 24 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாடுகளில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என USGS தெரிவித்துள்ளது. தைவானில், சுமார் 24 மில்லியன் மக்களும், சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களும் நிலநடுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ற செய்திகள் வெளியாகவில்லை.
The post தைவானில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு! appeared first on Dinakaran.