×

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு HCL-ல் பணி..!!

சென்னை: சேலம் மாநகராட்சி பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சிவானிஸ்ரீ க்கு உடனடி வேலை வழங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சில மாதங்களாக நான் முதல்வன் திட்டத்தில் சிவானிஸ்ரீ பயிற்சி பெற்று வந்துள்ளார். உயர்கல்வி வழிகாட்டுதலின்கீழ் பயிற்சி பெற்று எச்.சி.எல். நிறுவன பணிக்கு சிவானிஸ்ரீ தேர்வு பெற்றிருந்தார். பிளஸ் 2 தேர்வில் 569 மதிப்பெண் பெற்றதை அடுத்து எச்.சி.எல். நிறுவனத்தில் பணி பயிற்சிக்கு சிவானிஸ்ரீ தேர்வாகியுள்ளார். பணி பயிற்சி காலத்தின்போதே சிவானிஸ்ரீ-க்கு உயர்கல்வியும் அளிக்க எச்.சி.எல். நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

The post நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு HCL-ல் பணி..!! appeared first on Dinakaran.

Tags : HCL ,CHENNAI ,Sivanishree ,Salem Corporation School ,Sivanisree ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...