×
Saravana Stores

46 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், பள்ளிகளில் ஸ்மார்ட் காட்சிப் பலகைகள்!

சென்னை: 46 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 23,000 பள்ளிகளில் ஸ்மார்ட் காட்சிப் பலகைகள் அமைக்கப்படுகிறது. கல்வித் துறையில் சாதனைகளை படைத்து வரும் தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும். பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் ஓர் அடையாளம்தான் இந்த ‘ஸ்மார்ட் காட்சிப் பலகைகள்.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 23 ஆயிரம் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்ட்ஸ் அமைக்கப்பட்டு. சாதாரண வகுப்பறைகள் எல்லாம் ‘ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகப் போகின்றன. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 46 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரும் கல்வியாண்டில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 46 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், பள்ளிகளில் ஸ்மார்ட் காட்சிப் பலகைகள்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Government ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...