×
Saravana Stores

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 92.41% மாணவர்கள் தேர்ச்சி!

புதுச்சேரி: கடந்த மார்ச்-2024 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று (06.05.2024) வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 12948 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 92.41%
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 85.35% ஆகும்.

* புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்:

அரசு மேனிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 6101. இதில் ஆண்கள் 2570 பேரும் பெண்கள் 3531 பேரும் தேர்வு எழுதியவர்கள். இதில் ஆண்கள் 2002 பேரும், பெண்கள் 3205 பேர் என மொத்தம் 5207 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விழுக்காட்டில் ஆண்கள் 77.90 சதவீதமும் பெண்கள் 90.77 சதவீதம் என மொத்தம் 85.35 சதவீதம் பதிவாகியுள்ளது.

தனியார் மேனிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 7911. இதில் ஆண்கள் 3996 பேரும் பெண்கள் 3915 பேரும் தேர்வு எழுதியவர்கள். இதில் ஆண்கள் 3865 பேரும், பெண்கள் 3876 பேர் என மொத்தம் 7741 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேச்சி விழுக்காட்டில் ஆண்கள் 96.72 சதவீதமும் பெண்கள் 99.00 சதவீதம் என மொத்தம் 97.85 சதவீதம் பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.41 சதவீதம் ஆகும்

* புதுச்சேரி பகுதி

அரசு மேனிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4755. இதில் ஆண்கள் 2002 பேரும் பெண்கள் 2753 பேரும் தேர்வு எழுதியவர்கள். இதில் ஆண்கள் 1572 பேரும், பெண்கள் 2536 பேர் என மொத்தம் 4108 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விழுக்காட்டில் ஆண்கள் 78.52 சதவீதமும் பெண்கள் 92.12 சதவீதம் என மொத்தம் 86.39 சதவீதம் பதிவாகியுள்ளது.

தனியார் மேனிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 7106. இதில் ஆண்கள் 3678 பேரும் பெண்கள் 3428 பேரும் தேர்வு எழுதியவர்கள். இதில் ஆண்கள் 3571 பேரும், பெண்கள் 3397 பேர் என மொத்தம் 6968 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேச்சி விழுக்காட்டில் ஆண்கள் 97.09 சதவீதமும் பெண்கள் 99.10 சதவீதம் என மொத்தம் 98.06 சதவீதம் பதிவாகியுள்ளது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.38 சதவீதம் ஆகும்.

* காரைக்கால் பகுதி

அரசு மேனிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 1346. இதில் ஆண்கள் 568 பேரும் பெண்கள் 778 பேரும் தேர்வு எழுதியவர்கள். இதில் ஆண்கள் 430 பேரும், பெண்கள் 669 பேர் என மொத்தம் 1099 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேச்சி விழுக்காட்டில் ஆண்கள் 75.70 சதவீதமும் பெண்கள் 85.99 சதவீதம் என மொத்தம் 81.65 சதவீதம் பதிவாகியுள்ளது.

தனியார் மேனிலைப்பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 805. இதில் ஆண்கள் 318 பேரும் பெண்கள் 487 பேரும் தேர்வு எழுதியவர்கள். இதில் ஆண்கள் 294 பேரும், பெண்கள் 479 பேர் என மொத்தம் 773 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேச்சி விழுக்காட்டில் ஆண்கள் 92.45 சதவீதமும் பெண்கள் 98.36 சதவீதம் என மொத்தம் 96.02 சதவீதம் பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.03 சதவீதம் ஆகும்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 155. 2023-24 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.41 சதவீதம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 55 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. புதுச்சேரி பகுதியில் 51 பள்ளிகளும் காரைக்கால் பகுதியில் 4 பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 55 அரசு பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 1 அரசு பள்ளி மட்டுமே 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

The post புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 92.41% மாணவர்கள் தேர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை...