×
Saravana Stores

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளி ஏரி பகுதியில் உணவுக்காக நீர் நிலையங்களைத் தேடி வந்தபோது ஏரிப்பகுதியில் உள்ள தாழ்வான மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் 6 வயது மக்னா யானை உயிரிழந்தது. யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி வனப்பகுதி அமைத்துள்ளதால் காட்டு யானைகள் இடம் பெயருவது வழக்கம். சில நேரங்களில் இடம் பெயரும் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது

இதற்காக வனத்துறையினர் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்களிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி ஏரியில் நீரைத் தேடி 6 வயது மதிக்கத்தக்க மக்னா யானை வந்துள்ளது. அப்போது ஏரி பகுதியில் மிகவும் தாழ்வான மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி ஆறு வயது மக்னா யானை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் யானைகள் நீரை தேடி ஊருக்குள் வரக்கூடும் என்பதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri district ,Krishnagiri ,Chandan Pally lake ,Osur ,Dinakaran ,
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் ஆனந்த...