×

உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது

நீலகிரி: ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களின் எண்களையும், வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ‌ பா‌ஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது.

The post உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kopaka ,Kodiakanal ,Nilgiri ,Ooty ,Kodaikanal ,Tamil Nadu ,India ,Chennai High Court of Ooty and Godaikanal ,Kota ,Dinakaran ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...