×
Saravana Stores

வரத்து அதிகரிப்பு தஞ்சாவூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைவு

தஞ்சாவூர், மே 6: வரத்து அதிகரிப்பால் தஞ்சாவூர் மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்தது. தஞ்சாவூர் பூக்கார தெரு மற்றும் விளார் சாலையில் பூச்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைக்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

இதே போல் இங்கிருந்தும் ஆர்டரின் பேரில் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுவாக தொடர் சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்கள், வரத்து குறைவாக இருந்தால் பூக்களின் விலை உச்சத்தில் காணப்படும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே தஞ்சாவூரில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதற்கு வரத்து வழக்கத்தை விட குறைந்ததே காரணமாகும்.

தற்போது தஞ்சாவூர் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் குறைந்துள்ளது.மல்லிகை பூ கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையாகின.
இதே போல் கனகாம்பரம் ரூ.400, முல்லை ரூ.200, அரளி ரூ.150, செண்டி பூ ரூ.100 என விற்கப்பட்டது. இந்த வகை பூக்களின் விலை கடந்த வாரம் வரைக்கும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது வரத்து அதிகம் இருப்பதால் பூக்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

The post வரத்து அதிகரிப்பு தஞ்சாவூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Pookkara Street ,Vilar Road ,Dindigul ,Hosur ,Nilakottai ,Madurai ,
× RELATED தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக...