- பாளையம் புனித ஜோசப் தேவாலயம்
- பெரம்பலூர்
- பாளையம்
- புனித ஜோசப் கோவில்
- புனித ஜோசப் கோவில்
- தின் 163
- பாலயம் கிராமம்
- குரும்பலூர் பேரூராட்சி
- பெரம்பலூர் மாவட்டம்
- பாளையம் புனித ஜோசப் ஆலயம்
பெரம்பலூர்,மே.6: பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் 163வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, புனித யோசேப்பு ஆலயத் தின் 163 ஆவது ஆண்டு பெருவிழா மற்றும் தேர்த் திருவிழா நேற்று மே-மாதம் 5ஆம் தேதி ஞாயிற் றுக் கிழமை கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம்-26ம் தேதி மாலை 6:30 மணிஅளவில், கோவில் வளாகத்தில் பாளையம் பங்குகுரு ஜெயராஜ் தலைமையில், காரியஸ்தர் கள் முன்னிலையில் நடை பெற்ற விழாவில், பெரம்ப லூர் மறைவட்ட முதன்மை குரு ராஜ மாணிக்கம் கலந்து கொண்டு, 163ம் ஆண்டு பெருவிழா கொடியை கொடிமரத்தில் ஏற்றி வைத்து, சிறப்பு திருப்பலி நடத்தி வைத்தார்.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு பங்கு குருக்கள் தலைமையில், பல்வேறு தலைப்புகளில் மறையுரை யுடன் சிறப்புத் திருப்பலி நடைபெற்று வந்தது.
விழாவையொட்டி மே மாதம் 3ம்தேதி மாலை வேண்டுதல் சப்பர பவனி நடைபெற்றது. 4ம் தேதி சனிக் கிழமை ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதில் மைக்கேல் சம்மனசு, உயிர்த்த இயேசு கிறிஸ்து, வனத்து அந்தோணியார், புனித யோசேப்பு, தேவ மாதாவும் புனித செபஸ்தியாரும் என புனித சொரூபங்கள் பொருத்தப்பட்டு மின்னொளிர் மலர் அலங் காரத்துடன் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. நேற்று காலை 8 15 மணிக்கு அய்யம் பேட்டை பசுபதி கோவில் பங்குகுரு அந்துவான், பாளையம் பங்குகுரு ஜெயராஜ் மற்றும் மண்ணின் மைந்தர்கள் இணைந்து நடத்திய திருவிழா கூட்டு பாடல் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. மாலையில் அலங்கார சப்பர பவனியும், நற்கருணை ஆராதனை மற்றும் கொடிஇறக்கமும் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளில் பாளையம் மற்றும் பெரம்பலூர், குரும்பலூர், ரெங்கநாதபுரம், சத்திரமனை, வேலூர், புது நடுவலூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேர்வு எழுதுவதற்கு வருகை தந்த மாணவர்களை சோதனையிட்ட பின்னர் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் வாட்ச், கையில் கட்டிய கயிறு, மாணவிகள் தலையில் அணியும் பெரிய பேண்ட் ஆகியவற்றை அகற்றிய பிறகு தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர். குடிநீர் பாட்டில்கள் ட்ரான்ஸ்பரென்ட் பாட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
The post பாளையம் புனித யோசேப்பு ஆலய appeared first on Dinakaran.