×

சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா

சங்கரன்கோவில்,மே 6: சங்கரன்கோவில் நகர வர்த்தக சங்கம் சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. வர்த்தக சங்க தலைவர் முத்தையா தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் சின்னசாமி, ரெங்கன், இசக்கிராஜன், பாலசுப்ரமணியன், கணேசன், சண்முகம், ராமர், கணேசன், முகமது அலி, சங்கரன் முன்னிலை வகித்தனர் வர்த்தக சங்க செயலாளர் குருநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து வணிகர்கள் பேரணியை துவக்கி வைத்தார்.

சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோயில் அருகே கிளம்பிய பேரணி முக்கிய சாலைகள் வழியாக வந்து மீரான் சேட் காலனியில் உள்ள வர்த்தக சங்க அலுவலகத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து வர்த்தக சங்க அலுவலகத்தில் கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் சுப்பிரமணியன், சங்கர சுப்பிரமணியன், பொன்ராஜ், சங்கரசுப்பு, மாரிமுத்து, வேணுகோபால், சுப்பையா, சண்முகவேல், சங்கர், மகாலிங்கம், முப்பிடாதி, சபரிநாத், மசூது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Merchant's Day Festival ,Shankaran Temple ,Sankarankoil ,Sankarankoil City Chamber of Commerce ,Merchants' Day ,Muthiah ,Chinnasamy ,Rengan ,Ishakirajan ,Balasubramanian ,Ganesan ,Merchants Day Festival ,Sankaran Temple ,Dinakaran ,
× RELATED தொடரும் திருட்டு சம்பவங்களால்...