- வடமாடு மஞ்சு விரதம்
- தேவகோட்டை
- வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
- தனிச்சா கிராமம்
- சிவகங்கை
- மதுரை
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- திண்டுக்கல்
- தேனி மாவட்டங்கள்
தேவகோட்டை, மே 6: தேவகோட்டை அருகே தாணிச்சா ஊரணியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகளும், காளைகளை அடக்க 117 காளையர்களும் களமிறங்கினர். போட்டியில் வட்ட வடிவிலான திடலின் நடுவே வடத்தில் கட்டப்பட்டிருக்கும் மாட்டினை 9 பேர் கொண்ட குழுவினர் 25 நிமிடங்களில் அடக்க வேண்டும்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் காளையர்கள் போராடி மாடுகளை அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர். அப்போது 4வதாக களம் இறங்கிய காளையை வீரர்கள் அடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக வடக்கயிறு அறுந்து காளைமாடு நாலாபுரமும் ஓடி மேடையில் மீது பாய்ந்து அங்கிருந்து நிர்வாகிகளை முட்டி தள்ளி வெளியேறியது. இதில் பார்வையாளர்கள் 3 பேர் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து புதிதாக வடக்கயிறு கொண்டு வரப்பட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
The post வடமாடு மஞ்சு விரட்டு: மாடு முட்டி 3 பேர் காயம் appeared first on Dinakaran.