- நெய்வேலி
- சசிகுமார்
- விஷ்வா
- வடக்கு வேலூர் ஊராட்சி
- செப்லானந்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி
- நெய்வேலி.…
நெய்வேலி, மே 6: ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்தவர் சசிகுமார் மகன் விஷ்வா(18). இவர் நெய்வேலியை அடுத்த சேப்ளாநத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த ஆண்டுடன் இவருக்கு படிப்பு முடிவதால் கடைசி நாள் வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது நண்பரான மேட்டுக்குப்பம் பொன்வளவன் மகன் ஜெகதீசன் (19) என்பவருடன் நெய்வேலி அடுத்த கூனங்குறிச்சி பகுதியில் உள்ள நெய்வேலி அனல் மின்நிலையத்துக்கு பயன்படுத்தப்படும் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி விஷ்வா தவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் சேற்று நீரில் மூழ்கினார்.
உடனே அவரது நண்பர் ஜெகதீசன் அவரை வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர், காவல் துறை, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், விஷ்வாவை ேதடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 மணிநேர தேடலுக்கு பிறகு விஷ்வா நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post நெய்வேலி அருகே ஏரியில் மூழ்கி மாயமான மாணவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.