வாடிப்பட்டி, மே 6: வாடிப்பட்டி அருகே போடிநாயாக்கன்பட்டி பகுதியில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ள தோப்புகள் உள்ளன. இதற்கிடையே தென்னையில்கருந்தலைப் பூச்சி மற்றும் காண்டாமிருக வண்டுகளின் தாக்கம் அதிக அளவில் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் போடிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் கருந்தலைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வேர் ஊட்டச் செயல்முறைகள் குறித்து காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் நேரடி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதன்படி, வாடிப்பட்டி ஒன்றியத்தில் கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி மற்றும் களப்பணியில் ஈடுபட்டு வரும் வேளாண் மாணவிகள் காவியலெட்சுமி, ஜெயதுர்காதேவி, அபிநயா, மரியஆன்சி, சர்மிலி, ராகவி, லாவண்யா ஆகியோர் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கு கருந்தலைப்பூச்சி மற்றும் காண்டாமிருக வண்டுகளை அழிப்பது குறித்து நேரடியாக விளக்கம் அளித்தனர்.
The post கருந்தலைப் பூச்சி தாக்கம் குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்: வேளாண் மாணவிகள் வழங்கினர் appeared first on Dinakaran.