×

காந்தி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

சத்தியமங்கலம்,மே6: சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெ. தீனதயாளன் தலைமை தாங்கினார்.வணிகவியல் துறையின் தலைவர் பி.வெங்கட்ராமன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் செயலாளர் சிராஜுதின் மற்றும் இயக்குனர் கார்த்தி அரசு ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கல்லூரி அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டனர். முடிவில் ஆங்கில துறையின் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post காந்தி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Gandhi College ,Sathyamangalam ,Gandhi College of Arts and Science ,Deenadayalan ,P.Venkataraman ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு