- மேற்கு வங்கம்
- ஆளுநர் ஆனந்த போஸ்
- Rajbhavan
- கொல்கத்தா
- கவர்னர்
- மேற்கு
- வங்கம்
- ஹரே ஸ்ட்ரீட் காவல்
- தின மலர்
கொல்கத்தா: காவல்துறையின் சம்மனை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்க ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என ராஜ்பவன் பெண் ஊழியர் ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது சம்மந்தமாக சாட்சிகளை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். அங்கு உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆராய காவல்துறை முடிவு செய்துள்ளது.
ராஜ்பவன் ஊழியர்கள் 3 பேர் மற்றும் ஒரு காவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில், ராஜ்பவன் ஊழியர்கள் யாரும் காவல்நிலையத்துக்கு வரவில்லை என்றும் காவலர் மட்டும் ஆஜரானார் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் ஆனந்த போஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில்,இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361 (2) மற்றும் (3) ன் படி,ஆளுநருக்கு எதிராக காவல்துறை விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்க முடியாது.
ஜனாதிபதி, மாநில ஆளுநருக்கு எதிராக அவரது பதவிக் காலத்தில் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர முடியாது. அதே போல் கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ முடியாது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துவதாகவும், அவர்கள் ராஜ்பவனின் ஊழியர்களை ஆய்வு செய்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநருக்கு இருக்கும் சிறப்புரிமையால் ராஜ்பவனில் உள்ள ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை சம்மன் அனுப்பினால் அதை புறக்கணிக்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டுள்ளார்.
The post போலீஸ் சம்மனை கண்டுகொள்ளாதீர்கள் ராஜ்பவன் ஊழியர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவு appeared first on Dinakaran.