×

61 வயதில் நீட் எழுதிய மாஜி வங்கி அதிகாரி

சேலம்: நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாநகரில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரி தேர்வு மையத்தில் சேலம் சின்னதிருப்பதி பங்காளாதெருவை சேர்ந்த இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் (61) என்பவரும் தேர்வெழுதினார். தேர்வு முடிந்து மாலை 6 மணிக்கு வெளியே வந்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் மாணவராக இருக்கும்போது, ஹோமியோபதி மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால், அக்ரி படித்து முடித்துவிட்டு வங்கி பணிக்கு சென்றுவிட்டேன். இருப்பினும் ஹோமியோபதி தொடர்பாக தொடர்ந்து படித்து வந்தேன். தற்போது இந்த வயதிலும் ஹோமியோபதி மருத்துவத்தை முறையாக படித்து டாக்டராக நீட் தேர்வு மூலம் வழி இருக்கிறது. அதனால்தான், நீட் தேர்வை எழுதி, ஹோமியோபதி படிக்க ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக கடந்த 3 மாதங்களாக பயிற்சி பெற்றேன். தற்போது தேர்வை எழுதி முடித்துவிட்டு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post 61 வயதில் நீட் எழுதிய மாஜி வங்கி அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Salem ,NEET ,Srinivasan ,Indian Bank ,Chinnathirupathi Bangladeru ,Shakti Kailash College Examination Center ,Dinakaran ,
× RELATED கைதிகளுக்கு கஞ்சா கடத்திய சமையல்காரர் ‘டிஸ்மிஸ்’