- சென்னை
- திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை
- சிங்கப்பெருமல் கோயில்
- செங்கல்பட்டு
- சிங்கப்பெருமாள்
- செங்கல்பட்டு மாவட்டம்
- தெற்கு மாவட்டம்
- தினம்
- சிங்கப்பெருமாள் கோயில்
செங்கல்பட்டு: முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் படையெடுப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கின்றன.
வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறை என்பதால் சென்னையில் தங்கி பணிபுரியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி சென்றனர் தற்போது நாளை திங்கட்கிழமை மற்றும் அலுவலகங்கள் ஆகியவை இயங்கும் தினம் என்பதால் தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி மக்கள் ஒரே நேரத்தில் படையெடுத்து வருகின்றனர்
குறிப்பாக கார் இருசக்கர வாகனங்களில் அதிக அளவிலான மக்கள் சென்னையை நோக்கி படையெடுப்பதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
சுமார் சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருத்தேரி மகேந்திரா சிட்டி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போக்குவரத்து போலீசாரம் தற்போது போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.