×

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்.

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ-பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் “epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DINDIGUL DISTRICT ,GODAIKANAL ,Dindigul ,Dindigul District Godaikanal ,Dindigul District, ,Silver Falls ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு