×

திருப்பூரில் பெட்ரோல் பங்கில் தண்ணீரை ஸ்ப்ரே செய்வதன் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு!

திருப்பூர்: திருப்பூரில், பெட்ரோல் பங்கில் தண்ணீரை ஸ்ப்ரே செய்வதன் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் செய்யப்பட்ட ஏற்பாடு வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் ஏராளமான வழிகளை கையாண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இளநீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை தேடி தேடி சாப்பிட்டு தங்களது உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயில் 110 டிகிரிக்கு மேலாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கத்திரி வெயிலும் துவங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, திருப்பூர் மாநகரப் பகுதிகளில் பல இடங்களில் சிக்னலில் செயற்கை முறையில் நிழல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக திருப்பூர் பெரியார் காலணியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் வெப்பத்தை உணராமல் இருப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்டர் ஸ்ப்ரயர் மூலம் தண்ணீர் ஸ்ப்ரே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தொழிலாளர்கள் காலை முதல் மாலை வரை வெப்பத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. மேலும் பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் வாட்டர் ஸ்பிரேயரில் நிற்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து நிம்மதி அடைந்து செல்கின்றனர். இத்தகைய செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post திருப்பூரில் பெட்ரோல் பங்கில் தண்ணீரை ஸ்ப்ரே செய்வதன் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு! appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...