×

போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா, பத்மம்மா தம்பதியின் மகன் ரமேஷன் 33, இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து போலாந்து நாட்டில் தனது மேற்படிப்பை படிக்க சென்றார். பின்னர் தனது மேற்படிப்பை முடித்த ரமேஷன் போலாந்தில் USA VILLANOVA யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கலகத்தில் ஆராய்ச்சித் துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் போலாந்து நாட்டில் கல்லூரியில் படிக்கும்போது அதே நாட்டை சேர்ந்த ஆடேம் மல்கோர்த்த, டிபிகா என்பவரின் மகள் எவலினா மேத்ரோ 30 என்ற பெண்ணுடன் ரமேஷனுக்கு காதல் மலர்ந்தது.

3 ஆண்டுகளாக இருவரும் காதிலித்து வந்த நிலையில் இவர்களுடய காதலை இருவிட்டார் பெற்றோரிடம் கூறியுள்ளனர். முதலில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷின் பெற்றோர் ஆலோசித்து வந்தனர். பின்னார் இரு வீட்டாரும் யோசித்த நிலையில் பின்னர் ரமேஷின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதன் தெரிவித்தனர். கடந்த மாதம் இருவரும் இந்தியா வந்த நிலையில் பெண்ணிர் பெற்றோர் வரமுடியாத நிலையில் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் இன்று தமிழ் கலாச்சாரத்தின் படி நிச்சியதர்தம் நடைபெற்றும் பத்திரிக்கை வைத்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

வெளிநாட்டு பெண்ணுடன் கிருஷ்ணகிரி இளைஞர் தமிழ் கலாச்சார முறை படி ஊரார் ஊற்றார் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானனோர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியோடு ஏரளமான மக்கள் வந்து ஆச்சிரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் இவர்களின் திருமணம் இப்பகுதி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்திய நிலையில் ஏரளமான பொதுமக்களும் வந்து மாப்பிளை பெண்ணையும் வாழ்த்தி சென்றனர்.

The post போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்! appeared first on Dinakaran.

Tags : Veppanapalli Mupillai ,KRISHNAGIRI ,RAMESHAN ,THIMMAPPA ,PADMAMMA ,KURYANAPALLI VILLAGE NEAR VEPANASALLI ,KRISHNAGIRI DISTRICT ,POLAND ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்