மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நேற்று முதல் துவங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் பகுதியில் சீனிவாசன்(45) என்பவர் தனது வீட்டில் இரண்டு கன்று குட்டிகள் உட்பட நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார்.வீட்டின் அருகிலேயே மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அடுக்கி வைத்திருந்தார்.நேற்று மதியம் 12 மணியளவில் இந்த மாட்டு தீவன போரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மாட்டு தீவனம் முழுவதுமாக தீயில் இருந்து நாசமானது. தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த குடியிருப்புகளில் தீ வராமல் தடுக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து சேதமானதாக சீனிவாசன் வேதனை தெரிவித்தார்.
The post மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் வைக்கோல் போர் எரிந்து சேதம் appeared first on Dinakaran.