- மாரியம்மன் ேகாயில்
- நாகப்பட்டினம்
- நெல்லை மாரியம்மன் கோவில் திருவிழா
- நெல்லுக்கட மாரியம்மன் கோவில்
- சித்திரை மாத திருவிழா
- மாரியம்மன் ஏகைல்
நாகப்பட்டினம், மே 5: புகழ்பெற்ற நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செடில் உற்சவம் விடிய, விடிய நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. 28ம் தேதி பெரிய அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம்(3ம் தேதி) இரவு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூ செலுத்தினர். விழாவை முன்னிட்டு நேற்று காலை 7.20 மணி முதல் 8.20 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் சுப்பிரமணியன், நடராஜன், நிர்வாக அறங்காவலர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். வரும் 8ம் தேதி வசந்த உற்சவமும், 10ம் தேதி ரிஷபவாகன காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வரும் 12ம் தேதியும், செடில் உற்சவமும் நடைபெறுகிறது.
The post அரசுடமை, தனியார் வங்கி ஏடிஎம்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் நாகப்பட்டினத்தி்ல் பிரசித்திபெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ேகாயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.