×

₹17 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்புடைய காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் எஸ்.பி ஜெயகுமார் ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போகும் செல்போன்கள் குறித்து அதன் உரிமையாளர்கள் மூலம் அளிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டு அவ்வாறு காணாமல் போன செல்போன்கள் மீட்கப்படுவதுடன் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி ரூ.17 லட்சத்து 4 ஆயிரத்து 508 மதிப்புள்ள 106 செல்போன்கள் மீட்கப்பட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி எஸ்பிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செல்போன்களை ஒப்படைத்து எஸ்.பி ஜெயக்குமார் பேசுகையில், பொதுமக்களுக்கு செல்போன் என்பது மிகவும் அவசியம் தான் இருப்பினும் அதனை உரிய முறையில் கையாண்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தவுடன், செல்போன் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டினார்.

The post ₹17 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,SB ,Jayakumar ,Tiruvarur district ,
× RELATED எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்ற 22 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு